தவெக தொடக்க விழா.., GET OUT கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக சுமார் 3000 பேர் வருகை தந்துள்ளனர். தவெக தலைவர் விஜய் 9.30 மணியளில் விழா நடைபெறும் ஓட்டலுக்கு வருகை தந்தார்.
அதனை தொடர்ந்து தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியது.
முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து விழா மேடையில் இருந்து விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கீழே இறங்கினர்.
#WATCH | Chennai, Tamil Nadu | Actor Vijay arrives at the venue in Mahabalipuram where his party, Tamilaga Vettri Kazhagam's (TVK's) second-year anniversary celebrations, is being held.
— ANI (@ANI) February 26, 2025
(Source - TVK) pic.twitter.com/oUmrP3hVQ7
அதன்பின் அங்கு வைக்கப்பட்டு இருந்த பலகையில், 'Get Out' கையெழுத்து இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை விஜய் கண்டு களித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |