போனில் பேசிய ராகுல் காந்தி - வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?
36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார்.
போனில் பேசிய ராகுல்
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருந்துள்ள சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 2வது நாளாக சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஆனால் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் முடிந்ததும், இரவே தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2 நாட்களாக தனது நீலாங்கரை வீட்டை விட்டு வெளியே வராத அவர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் மட்டும் ஆலோசனை நடத்தினார்.
விஜய் வீட்டு முன்பு மாணவர் அமைப்பு ஒன்று ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இன்று காலை அவர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், அவரது வீட்டை காவல்துறையினர் சோதனையிட்டனர். போலியான மிரட்டல் என தெரிய வந்தது.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, விஜய்யை தொலைபேசியில் அழைத்து 15 நிமிடங்களுக்கு மேல் உரையாடியுள்ளார்.
வீட்டை விட்டு வெளியேறிய விஜய்
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும், நெரிசல் எப்படி ஏற்பட்டது, பாதிக்கப்பட்டவர்களின் தற்போதையை நிலை என்ன என்பது குறித்து கேட்டறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, 36 மணி நேரத்திற்கு தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து வெளியேறிய அவர், பட்டினப்பாக்கம் வீட்டிற்கு சென்றுள்ளார்.
கரூர் செல்ல பாதுகாப்பு கேட்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக பிரச்சார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜூனா மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |