497 மதிப்பெண்கள் எடுத்தும் விழாவுக்கு அழைக்காத விஜய்.., காரணம் தெரியாமல் கண்ணீருடன் மாணவி
10 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3 வது இடம் பிடித்த மாணவியை விஜய் கல்வி விருது விழாவுக்கு அழைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
விஜயின் விருது விழா
தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா கடந்த 28 -ம் திகதி நடைபெற்றது.
இந்த விழாவில் மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகைகளை அக்கட்சியின் தலைவர் விஜய் வழங்கினார்.
மாணவி பேட்டி
இந்நிலையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவிக்கு மாநில அளவில் 3 -வது இடம் பெற்றும், அவருக்கு விஜய் வழங்கும் கல்வி விருது விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவி கூறுகையில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். நான் 497 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். பள்ளி மற்றும் மாவட்டத்திலும் முதலிடம் பெற்றேன். மாநில அளவில் 3ஆவது இடம் பெற்றுள்ளேன்.
தேர்வு முடிவுக்கு பின்பு எனது தந்தைக்கு போன் அழைப்பு வந்தது. அப்போது, விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார். இதனால் நாங்கள் மகிழ்ச்சியில் இருந்தோம்.
விஜய்யிடம் அப்பாயிண்மென்ட் கிடைத்தவுடன் உங்களுக்கு தகவல் சொல்கிறேன் என்றார்கள். ஆனால், எங்களுக்கு 10 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் வரவில்லை.
பின்னர், நாங்கள் போன் செய்து கேட்டதற்கு ரிஜெக்ட் ஆகிவிட்டீர்கள் என்றார்கள். எதனால் என்னை ரிஜெக்ட் செய்தார்கள் என தெரியவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |