மதுரையில் நடக்க போகிறது விஜயின் முதல் அரசியல் மாநாடு! எப்போது தெரியுமா?
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை எப்போது நடத்துவது தொடர்பான தகவல்கள் வெளியகியுள்ளது.
நடிகர் விஜய்
நடிகர்விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், அண்மையில் இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், நடிகர் விஜய் கட்சியின் அரசியல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரசியல் மாநாடு
தற்போது தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் அரசியல் பணிகளை தொடங்கி உள்ளனர்.
அந்தவகையில், முன்பு வெளிவந்த தகவலின்படியே மதுரையில் அரசியல் மாநாட்டை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22-ம் திகதிக்கு முன்பே தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட இருப்பதால், பிறந்தநாளின் போதே கட்சியின் முதல் மாநாட்டினை மதுரையில் நடத்த முடிவு செய்திருக்கிறார்.
இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வரும் என்று பேசப்பட்டு வருகிறது. பல அரசியல் தலைவர்களுக்கு அடித்தளமிட்டதே மதுரை மாவட்டம் தான்.
அந்தவகையில் விஜயும் மதுரை தேர்ந்தெடுத்திருப்பது அரசியல் பயணத்திற்கும் தொடக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |