மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக.., வீடியோ வெளியிட்டு மகளிர் தின வாழ்த்து கூறிய விஜய்
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீடியோ வெளியிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து கூறிய விஜய்
மார்ச் 8-ம் திகதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீடியோ வெளியிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் பேசிய வீடியோவில், "இன்றைக்கு மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அம்மா, அக்கா, தோழி அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்கள்.
பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். எந்தவொரு பாதுகாப்பும் இல்லை என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.
நாம் எல்லோரும் சேர்ந்து தான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றியது இப்போது தான் புரிகிறது.
2026-ம் ஆண்டில் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை மாற்றுவோம். அதற்கு மகளிர் தின இந்த நாளில் உறுதியேற்போம். எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுடன் நான் நிற்பேன்" என்று பேசியுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) March 8, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |