லியோ படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு அவர் வாங்கிய சம்பளத்தின் தொகையானது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடிப்பில் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருகின்றது.
இதையடுத்து திரைப்படத்தில் உள்ள `BADASS' பாடலின் புரோமா வீடியோவும் வெளியாகி வைரலாகியது. படத்தின் ட்ரைலரும் வெளியாகி ஒரு மணித்தியாலத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு இவர் வாங்கிய சம்பளத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் சம்பளம்
லியோ படத்தில் நடிக்க நடிகர் விஜய் ரூ. 125 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். மேலும் லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் நடிக்க நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |