கரூர் செல்லும் தவெக தலைவர் விஜய்: டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் 5 கோரிக்கைகள்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூரில் கடந்த மாதம் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கான அனுமதியை தமிழக டிஜிபியிடம் கோரியுள்ளார். அதில் பாதுகாப்பு தொடர்பாக 5 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் 5 கோரிக்கைகள்
1- பாதுகாப்பு ஏற்பாடுகள்
திருச்சி விமான நிலையம் முதல் கரூர் வரை, மற்றும் மீண்டும் திரும்பும் வரை, முழுமையான மொபைல் பேட்ரோல், பொலிஸ் செக் பாயிண்ட், போக்குவரத்து மாற்றங்கள் உள்ளிட்ட பாதுக்காப்பு ஏற்பாடுகள் வேண்டும். பொதுமக்கள் அருகில் வராமல் தடுக்கும் நடவடிக்கைகள் அவசியம்.
2- விமான நிலைய பாதுகாப்பு
விமான நிலைய நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும். கூட்டம் கூடாமல் தடுக்க வேண்டும். விமான நிலைய அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு தேவை.
3- கரூரில் பாதுகாப்பு
பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு விஜய் செல்லும்போது, ஒரு கிலோமீற்றர் சுற்றளவிற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். யாரும் கூட்டமாக வரகூடாது. அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
4- மீடியா ஏற்பாடு
விஜய் வருகை புரியும் இடத்தில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது.
5- பயண திட்ட ஒத்துழைப்பு
விஜய் திருச்சி விமான நிலையம் வழியாக கரூருக்கு சென்று, பின்னர் சென்னைக்கு புறப்படுகிறார். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தி, பயண விவரங்கள் பகிரப்படும்.
இந்த அளவிலான பாதுகாப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அனுமதி கோருவது தமிழக அரசியலில் இதுவரை இல்லாத புதிய பரிமாணமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
TVK Vijay Karur visit, Vijay DGP letter security, Karur stampede victims, Karur tragedy Vijay response, Tamilaga Vettri Kazhagam news, Vijay Y-category security, Karur rally stampede