வெற்றிகரமாக 8வது அத்தியாயத்தை எட்டும் Bigg Boss - அடுத்ததாக தொகுத்து வழங்க போவது இவரா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாம் பாகத்தை தொகுத்து வழங்கப்போகும் பிரபலம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
தொகுத்து வழங்க போவது யார்?
பிக் பாஸ் தமிழின் ஏழு பாகங்களின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு, தற்போது எட்டாம் பாகத்திற்கு அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.
8 ஆம் பாகத்திற்கான பணிகளில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நிலையில், கமல்ஹாசன் பிக்பாஸ் தமிழ் 8 தொடரில் தொகுத்து வழங்கப்போவதில்லை என தெரியப்படுத்தினார்.
அவர் விலகினால், இனி யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இந்நிலையில் அடுத்த அத்தியாயத்தை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vandhaachu Pudhu Bigg Boss ? #VJStheBBhost @VijaySethuOffl ? #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision @disneyplusHSTam #VijayTV pic.twitter.com/VZxKnYUYI2
— Vijay Television (@vijaytelevision) September 4, 2024
மேலும் கமலைப் போலவே இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி சுவாரசியமாக கொண்டு செல்வாரா அல்லது அவரையும் தாண்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |