நீட் தேர்வுக்கு சிறப்பு பொது பட்டியல் தான் நிரந்தர தீர்வு.., விருது விழாவில் அரசியல் பேசிய விஜய்
நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு இது தான் என்று மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக வேற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
விஜய் பேசியது
தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்ட விழா நடைபெற்று வருகிறது.
அப்போது நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பேசிய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நீட் தேர்வு குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், "நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள், கிராமப்புற ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வை நான் மூன்று பிரச்சனையாக பார்க்கிறேன்.
1.நீட் தேர்வானது மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
2. ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிராக உள்ளது.
3. நீட் தேர்வு குளறுபடியால் அதன் மீது இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. அதற்கு நிரந்தர விலக்கு வேண்டும்.
நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை நான் மனதார வரவேற்கிறேன்.
இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமென்றால் அந்த கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
அதில் சிக்கல் ஏற்பட்டால் இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு திருத்தி, சிறப்பு பொது பட்டியல் உருவாக்கி அதில் கல்வி, சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |