தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் இவ்வாறு பேசியுள்ளார்- எடப்பாடி பழனிச்சாமி
தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் இவ்வாறு பேசியுள்ளார் என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
விஜய் பேசியது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆவேசமாக உரையாற்றினார்.
அப்போது அவர், "2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.
ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், 2026 தேர்தலில் தவெக - திமுக இடையேதான் போட்டி என விஜய் பேசியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
பழனிசாமி கூறியதாவது
அதற்கு பதில் அளித்த அவர், "விஜய் அவருடைய கருத்தை சொல்கிறார்.
நாட்டின் எல்லா கட்சி தலைவர்களும் அவர்களது கட்சி வளர்வதற்காக, தொண்டனை உற்சாகப்படுத்துவதற்காக இவ்வாறு பேசுவார்கள்.
நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள்" என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |