குக் வித் கோமாளி புகழ் அப்பாவாக போறாராம் பா...
விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் புகழ் அப்பாவாக போவதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமானது தற்போது வைரலாகி வருகின்றது.
குக் வித் கோமாளி புகழ்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கிடைத்த வரவேற்பின் மூலமாக 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
இதையடுத்து ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியன்று நீண்ட நாட்களாக காதலித்து வந்த பென்ஸியை திருமணம் செய்தார். இன்று அவர்களின் திருமண நாளாகவுள்ள நிலையில் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியையும் வெளியிட்டுள்ளார்.
திருமண நாள்
விரைவில் அப்பாவாகப் போகிறேன் என்கிற சந்தோஷமான அறிவிப்பை தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
மேலும் புகழின் மனைவி கர்ப்பமாக உள்ளதை அறிந்த ரசிகர்கள் பலரும் புகழுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |