விஜயின் கட்சி கொடியில் இருக்கும் வாகை மலர்! அதன் பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன தெரியுமா?
தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடிக்கு நடுவில் இருக்கும் வாகை மலரின் அர்த்தம் என்ன என்பதை பார்க்கலாம்.
விஜயின் கட்சி கொடி அறிமுகம்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 22) பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும், கட்சி பாடலையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் விஜயின் பெற்றோர், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். கட்சியின் கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பாக அனைவரும் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.
சிவப்பு, மஞ்சள் நிறப் பின்னணியில் போர் யானைகள் இருபுறமும், வாகை பூ நடுவிலும் உள்ளவாறு கட்சியின் கொடி உள்ளது. மேலும், வாகை மலரை கட்சி கொடியில் நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
இதில் இருக்கும் யானை என்பது வலிமையான மிருகமாக பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக வெற்றி கழகம் வலுவான கட்சியாக பார்க்கப்படுகிறது என்பதை குறிக்கிறது.
வாகை மலர்
மேலும், யானைக்கு நடுவில் இருக்கும் வாகை மலரின் அர்த்தம் வெற்றி என்பதாகும். அதோடு பூக்கள் மிகவும் மிருதுவானவை. இதனால், அவற்றை பாதுகாக்க வலிமையான ஒன்று தேவைப்படுவதால் யானை இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதோடு, இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்களும், மொழிகளும் உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் அனைத்து காலாச்சாரங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதில், யானை மற்றும் வாகை மலருக்கு ஆரத்தழுவுவது என்று மற்றொரு அர்த்தமும் உள்ளது. இந்த காரணத்தினால் இடம்பெற்றிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
இப்போது நாம் வாகை என்ன என்பதையும், அதன் சிறப்புகள் என்ன என்பதையும் பார்க்க போகிறோம். தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட இந்த வாகை மரமானது வெப்ப மண்டலங்களில் பரவலாக காணப்படுகிறது.
குறிப்பாக, தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழமையான மரமாகும். மேலும், வலுவான மரமாகவும் கருதப்படுகிறது.
போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வந்தது. தற்போதும், வெற்றி வாகை சூடுவார்கள் என்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளது.
இந்த வாகை மரமானது 18 மீ முதல் 30 மீ வரை வளரக்கூடியது. இதன் கிளைகள் அகன்று விரிந்து ஒரு குடைபோலக் காணப்படும். இந்த மரத்தின் இலைகள் தொடக்கத்தில் கரும்பச்சையிலும், முதிர்ச்சி நிலையில் பழுப்பு நிறத்திலும் காணப்படும். மேலும், இரவு நேரத்தில் இலைகள் மூடிக்கொள்ளும்.
சிறப்புகள்:
* வாகை மலரை சூடுதல் என்பது வெற்றிக்கான மகிழ்ச்சியை உணர்த்தும்.
* இது வீக்கம், கொப்புளம் வடிதல், இருமல், நுரையிரல் அழற்சி, ஈறழற்சி ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. முக்கியமாக, இந்த மரத்தின் பட்டையை அழற்சிக்கு பயன்படுத்துகின்றனர்.
* இந்த மரத்தின் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியவை மருத்துவத்திற்கு உதவுகிறது.
* தமிழீழத்தின் தேசிய மரமாக வாகை மரம் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |