விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்! 71 பேருக்கு 71 நிமிடங்களில் டாட்டூ போடும் உலக சாதனை நிகழ்வு
விஜயகாந்தின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் அவரது முகத்தை 71 பேருக்கு 71 நிமிடங்களில் டாட்டூ போடும் உலக சாதனை நிகழ்வு நடைபெறவுள்ளது.
விஜயகாந்த் பிறந்த நாள்
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28 -ம் திகதி மறைந்தார். அவரது உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கோயில் போன்ற தோற்றத்தில் உருவாக்கி கேப்டன் கோவில் என்று கட்சியினர் அழைத்து வருகின்றனர்.
மேலும், விஜயகாந்த் மரணமடைந்த நாளில் இருந்து இன்று வரை யார் அவர் நினைவிடத்திற்கு வந்தாலும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 8 மாதங்களாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜயகாந்த் பிறந்தநாள் நாளை (25-ம் திகதி) கொண்டாடப்படவுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது.
அதாவது, 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகத்தை டாட்டூ போடும் உலக சாதனை நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது. கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என ஒரே நேரத்தில் டாட்டூ போடும் நிகழ்வை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைக்க உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |