மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கேப்டன் விஜயகாந்த்: வெளியான அறிக்கை
தேமுதிக தலைவரான விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விஜகாந்த்தின் உடல்நிலை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.
இருமல், காய்ச்சல், சளி தொந்தரவால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த மாதம் 18-ம் திகதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே விஜகாந்த்தின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில் கேப்டன் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் பரப்பாதீர்கள். வதந்தியை யாரும் நம்பாதீர்கள், அவர் விரைவில் வீடு திரும்பி நம்மை சந்திப்பார் என பிரேமலதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மருத்துவமனை அறிக்கை
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்" என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |