கேப்டன் விஜயகாந்த் காலமானார்: கண்ணீரில் மூழ்கியது தமிழகம்: மீளாத் துயரில் தொண்டர்கள்
நடிகரும் தே.மு.தி.க தலைவருமான கேப்டன் விஜயகாந்த்(71) இன்று காலமானதை தொடர்ந்து அவரது வீட்டின் முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கதறியழுதப்படி சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மருத்துவமனையில் விஜயகாந்த்
தே .மு.தி.க கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான விஜயகாந்த் உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக சளி மற்றும் தொண்டை வலி காரணமாக கடந்த நவம்பர் மாதம் 18ம் திகதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்து வீடு திரும்பிய தே,மு.தி.க தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் உடல்நல கோளாறு காரணமாக சமீபத்தில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
மேலும் விஜயகாந்த் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும், வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
விஜயகாந்த் காலமானார்
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் இன்று காலை மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும், தமிழக அரசியல் பின் தொடர்பாளர்களும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
தமிழக அரசியலில் மிகப் பெரிய ஆளுமையக வலம் வந்த கேப்டன் விஜயகாந்த், கோடிக்கணக்கான ரசிகர்களையும், தொண்டர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு, நிரந்தர துயிலில் மூழ்கியுள்ளார்.
கேப்டன் விஜயகாந்தின் மறைவை தொடர்ந்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீருடனும், மீளாத் துயருடனும், விஜயகாந்த் அவர்களின் வீட்டின் முன் குவிந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Vijayakanth, DMDK, Tamil Nadu