சீமானுடன் என்ன யாரும் சேர்த்து வைக்கல.. என் வாழ்க்கையை முடிக்க போறேன்: பரபரப்பை கிளப்பும் விஜயலட்சுமி
கடந்த 12 வருடங்களாக சீமான் கொடுத்து வரும் டார்ச்சர் காரணமாக இந்த வாரத்தில் தான் துயரமான முடிவை எடுக்கப்போவதாக விஜயலட்சமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சீமான் - விஜயலட்சுமி விவகாரம்
சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் என்றும், என்னை அவர் பயன்படுத்திக் கொண்டு கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
பின்னர், சீமான் தரப்பு பேசியதை தொடர்ந்து அந்த வழக்கை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். இதனையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் தான் வாபஸ் பெற்றதாக அவர் கூறினார். ஆனால், மீண்டும் அவர் என்னை ஏமாற்றி விட்டார் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்ததன் படி பொலிஸார் விசாரணை நடத்தினர்.ஆனால், திடீரென வழக்கை வாபஸ் பெற்ற விஜயலட்சுமி கர்நாடகா செல்வதாக கூறினார். அங்கு சென்றும் சீமானுக்கு எதிராக பல வீடியோக்களை வெளியிட்டார்.
சீமானுடன் சேர்த்து வைக்கல:
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நான் கர்நாடகாவில் வாழ சிரமப்படுகிறேன். கடந்த வருடம் இப்படி தவித்து கொண்டிருக்கும் போது தான் சீமான் வந்தார். ஆனால், மதுரை செல்வத்தால் நாசமாகி விட்டது. அதானல் தான் வழக்கு பதியும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
ஆனால், காவல்துறையினர் என் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. சீமானுக்கு எந்த கவலையும் இல்லை. நான் இந்த வாரம் துயரமான முடிவு எடுக்க போகிறேன். 12 வருடமாக நான் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறேன். எனக்கு யாரும் இல்லை. நான் முடிவை தேடி கொள்ள போகிறேன். இதற்கு காரணம் சீமான் தான்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |