நான் செத்த பிறகு உலகமே உங்கள துரத்தி அடிக்கும் சீமான் - மீண்டும் வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி
சீமான் நீங்க ரொம்ப தப்பு பண்ணிட்டிங்க என நடிகை விஜயலட்சுமி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி வரும் நடிகை விஜயலட்சுமி, சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் 'என்னுடைய மரணம் சீமானையும் அவரது கட்சியையும் தமிழ்நாட்டுக்கு புரிய வைத்துவிடும்' என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், விஜயலட்சுமி ஒரு கோடி கொடுத்து சீமான் செட்டில்மென்ட் செய்துவிட்டார் என்று எல்லா யூடியூப் சேனல்களும் பொய் செய்தி வெளியிட்டனர்.
நாளைக்கு வரைக்கும் நான் இருக்க மாட்டேன்..!#Vijayalakshmi | #Seeman | #NTK pic.twitter.com/iQzhvmsMKL
— IBC Tamil (@ibctamilmedia) March 10, 2024
ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னாடி நான் சாகப்போறேன்னு கோரமான வீடியோ போட்டேன். அந்த பொண்ணு பாவம்ன்னு சொல்லி எல்லாரும் திரண்டு சீமானை கேள்வி கேட்டிருக்க வேண்டும். அதை செய்யாமல் விஜயலட்சுமி இறந்தால் அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? எல்லாரையும் அம்பலப்படுத்திவிட்டு தான் சாவேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும் அவரது வீடியோவில், 24 தூக்க மாத்திரை வாங்கி வைத்திருப்பதாகவும், அதனை சாப்பிட்டு இறந்த பிறகு உலகமே சீமானை திரண்டு அடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
என் உயிரை முடிச்சிக்கப்போறேன்! தலைவர் பேரை சொல்லி சீமான் நாசம் செய்தார் - கடைசி வீடியோ என வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி
அத்துடன், ''சீமான் மாமா நீங்க ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க. கடைசியா தமிழ்நாட்டுக்கு வாக்குமூலம் கொடுத்துட்டு போறேன். என்ன முயற்சி பண்ணாலும் சீமானுக்கு மனிதாபிமானமே வரல. கடைசி வரையிலும் நான் சீமானோட மனைவியாகவே போய்டணும்ன்னு விருப்பப்படுறேன். தமிழ்நாட்டில் எனக்கு ஆதரவாக இருந்த எல்லோருக்கும் நன்றி. என்ன மன்னிச்சிடுங்க, எனக்கு வேற வழி தெரியல'' என பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |