ராதிகா அம்மாவுக்கு மட்டுமல்ல, விருதுநகர் தாய்மார்களுக்கும் மகன் தான்: விஜய பிரபாகரன் உருக்கம்
ராதிகா அம்மா மட்டுமல்ல, விருதுநகரில் உள்ள எல்லா தாய்மார்களும் என்னை மகன் போலதான் பார்க்கின்றனர் என்று விஜய பிரபாகரன் உருக்கமாக பேசியுள்ளார்.
ராதிகா சரத்குமார் பேசியது
விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணியான தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனர்.
இதில், ராதிகா சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, "விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் எனது மகளுடன் படித்த பையன். எனக்கும் ஒரு மகன் மாதிரி தான். சின்ன பையன் நன்றாக இருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
விஜயபிரபாகரன் உருக்கம்
இந்நிலையில் விஜயபிரபாகரன் தனது பேட்டி ஒன்றில், "ராதிகா அம்மா மட்டுமல்ல, விருதுநகரில் உள்ள எல்லா தாய்மார்களும் என்னை மகன் போலதான் பார்க்கின்றனர்.
அவர் என்னை மகன் என்று கூறியதில் எந்த தவறும் இல்லை. என்னை அவர் சிறிய வயதிலிருந்து பார்க்கிறார். நானும் அவருடைய மகளும் ஒரே வகுப்பில் தான் படித்தோம். திட்டமிட்டு செய்யும் யுக்திகள் எதுவும் இல்லை" என்று உருக்கமாக பேசியுள்ளார்.
மேலும் அவர், "என் அப்பா கனவுகளை நனவாக்கவும் அவர் செய்ய முடியாததை செய்யவும்தான் நான் இந்த பொறுப்பை ஏற்றிருக்கிறேன். விருதுநகரை சிறப்பான தொகுதியாக மாற்றுவது தான் லட்சியம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |