விஜயகாந்த் நிலையை பார்த்து கண்ணீர் விடும் ரசிகர்கள்! வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் போது சிக்கிய வீடியோ
சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு உடல்நலம் குன்றி விஜயகாந்த் விமான நிலையத்தில் வலம் வந்த வீடியோ காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த் தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். கடந்த 2011 தேர்தலில் தேமுதிக பல இடங்களில் வென்ற நிலையில் தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் ஆனார் விஜயகாந்த்.
தொடர்ந்து அரசியல் களத்தில் சூறாவளியாக இருந்த விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தைராய்டு பிரச்சனை , தொண்டையில் தொற்று, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளால் அவரது ஆரோக்கியம் குன்றியது.
தனது உடல் நலக் கோளாறுகளுக்காகச் சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார் விஜயகாந்த். சென்னையிலும், அமெரிக்காவிலும், சிகிச்சைகளைத் தொடர்ந்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக இன்று துபாய் செல்கிறார்.
DMDK president @iVijayakant left for Dubai from Chennai for medical treatment on Monday morning. He was accompanied by his youngest son Shanmuga Pandian and his assistants Kumar and Somu. #DMDK #Vijayakanth @aaichnairport #Chennai #Dubai#Chennaiairport pic.twitter.com/KRPOKhPewC
— DT Next (@dt_next) August 30, 2021
லண்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் அவருக்கு நடைப்பயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி கொடுப்பதற்காகத் துபாய் வருகிறார். இந்த நிலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் துபாய் செல்லும் விஜயகாந்த்துடன் அவரது இளைய மகன் சண்முகப்பாண்டியனும், உதவியாளர்கள் இருவரும் செல்கின்றனர்.
இதையடுத்து விஜயகாந்த் சக்கர நாற்காலியில் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்திருக்க சண்முகபாண்டியன் நாற்காலியை தள்ளி கொண்டு போகும் வீடியோ வெளியாகியுள்ளது.
சினிமாவிலும், அரசியல் களத்திலும் கம்பீரமாக வலம் வந்த விஜயகாந்தின் தற்போதைய நிலையை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.