பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இலங்கை வீரருக்கு ஈழத்தமிழரான இளம் பிரபலம் வாழ்த்து! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
பராலிம்பிக்கில் தங்கம் வென்று இலங்கைக்கு பெருமை தேடி தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு ஈழத்தமிழரான இலங்கை கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியஸ்காந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட தினேஷ் பிரியந்த ஹேரத் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனையை படைத்ததோடு தேசத்துக்காக தங்கமும் வென்று அசத்தியுள்ளார்.
இதன் மூலம் இலங்கைக்கு பராலிம்பிக்கில் இலங்கைக்கு முதல் தங்க மெடலை பெற்று தந்து பெருமை சேர்த்துள்ளார் தினேஷ் பிரியந்த் ஹேரத். இதனையடுத்து சாதனை நாயகன் தினேஷுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Well done dinesh Priyantha, We are so proud of you ??❤️ He becomes first Sri Lankan to win a Gold Medal in Paralympics : World Record in the Javelin Throw event (67.79m) at the Paralympic Games 2020 in Tokyo ? pic.twitter.com/a4YBvCPRhR
— Vijayakanth Viyaskanth (@RealVijayakanth) August 30, 2021
அந்த வகையில் யாழ்ப்பாண தமிழரான கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியஸ்காந்த் டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவர் கடந்தாண்டு நடைபெற்ற லங்கா ப்ரீமியர் தொடரில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
மேலும் ஐபிஎல் தொடரின் ஏல பட்டியலிலும் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயர் இடம்பிடித்திருந்தது. வருங்காலத்தில் இந்த துடிப்பான இளைஞர் இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயகாந்த் வியஸ்காந்தின் டுவிட்டர் பதிவில், வெல்டன் தினேஷ், நாங்கள் உங்களை பற்றி பெருமைப்படுகிறோம்.
அவர் பாரா ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற முதல் இலங்கையர் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.