அதிமுக, நாம் தமிழர் கட்சிக்கு ஷாக் கொடுத்த விஜய் மக்கள் இயக்கம்! கவனம் ஈர்த்த பெண் வேட்பாளர்
சென்னையில் உள்ள முக்கிய வார்டில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி விஜய் மக்கள் இயத்தை சேர்ந்த பெண் வேட்பாளர் இரண்டாவது இடம் பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
கோடம்பாக்கம் மண்டலத்தை பொறுத்தவரை வார்டு 136ல் திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ், 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர்பெற்ற வாக்குகள் 7,222ஆகும். கடும் போட்டியாக பார்க்கப்பட்ட அதிமுக லஷ்மி கோவிந்தசாமி 1137 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் மக்கள் இயக்கம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட அறிவுச்செல்வி 5,112 வாக்குகள் பெற்று கவனிக்க வைத்துள்ளார்.
நான்காவது இடத்தை நாம் தமிழர் பிடித்துள்ளது. இதற்கிடையே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட அறிவுச்செல்வியின் கணவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் எனக் கூறப்படுகிறது.
உட்கட்சி பிரச்னையால் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மனைவியை களம் இறக்கியதாகவும், அந்த வகையிலேயே அதிகளவில் வாக்குகள் பெற முடிந்ததாகவும் அம்மண்டல அதிமுக தொண்டர்கள் கூறுகிறார்கள்.