விக்ரம் லேண்டர் ரோவரால் நிலவில் தடம் படிக்க முடியாதது ஏன்?
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் சந்திரயான் 3
ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர்.
ஒட்டு மொத்த உலக நாடுகளுமே இந்தியாவை திரும்பி பார்த்தது, இந்நிலையில் அங்கிருந்தபடி புகைப்படங்களை எடுத்து அனுப்பியதுடன் ஆய்வையும் தொடங்கியது.
நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியிம் உட்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதையும் உறுதி செய்தது.
ஆனால் நிலவில் ரோவரால் தடம் பதிக்க முடியவில்லை, ஏனெனில் இந்திய தேசியக்கொடி மற்றும் இஸ்ரோவின் அடையாளத்தை நிலவில் தடம்பதிக்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.
இந்நிலையில், நிலவின் மண் தூசிகளாக அல்லாமல் மண் மிக இறுக்கமாக கனிம வடிவில் இருப்பதால் தடம் பதிக்க முடியவில்லை என இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.