இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர் - யார் இந்த விக்ரம் ரத்தோர்?
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விக்ரம் ரத்தோர்
2026 ஐசிசி T20 உலக கிண்ண தொடர் வரும் பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி மார்ச் 5 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், உலக கிண்ண தொடருக்காக இலங்கை அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விக்ரம் ரத்தோர்

1996 முதல் 1997 வரை இந்திய அணிக்காக 7 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், 146 முதல் தர போட்டிகளில் விளையாடி, 11,473 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
மேலும், 2023 ODI உலக கிண்ணத்தில் இறுதி போட்டிக்கு சென்ற இந்திய அணி மற்றும் 2024 T20 உலக கிண்ணம் வென்ற இந்திய அணிக்கு துடுப்பாட்ட பயிற்சியாளராக இருந்துள்ளார்.
இதனையடுத்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்காக நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
சமீபத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் மற்றும் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூரிய தொடர்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |