மும்முரமாக நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! வெல்லப்போவது யார்?
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை
விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6 -ம் திகதி மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இந்த தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கினர். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எண்ணப்படும். அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாக எண்ணப்படும்.
அந்தவகையில், 3 -வது சுற்று முடிவில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா 18,057 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அடுத்ததாக பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி 7,323 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அபிநயா 1,120 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |