விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! கடும் மும்முனை போட்டி
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6 -ம் திகதி மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்த தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், நேற்று பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அதன்பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதையடுத்து, வரும் 13 -ம் திகதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. மேலும், இன்று வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |