விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த எடப்பாடி
வருகிற ஜூலை 10 ஆம் திகதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் அதிமுக சார்பிர் யார் களமிருங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது.

இந்நிலையில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானமானது இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த செய்தியானது தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ள, நிர்வாகத் திறனற்ற அராஜக விடியா திமுக ஆட்சியில் 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை கழகம் புறக்கணிக்கிறது !
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) June 15, 2024
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/1qQC3l7ijF
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |