இறந்துவிட்டதாக உக்ரைன் கூறிய ரஷ்ய தளபதி: பொதுவெளியில் தோன்றி அதிர்ச்சியளித்த புகைப்படம்
உக்ரைனின் சிறப்பு தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில் வீடியோ இணைப்பு மூலம் இணைந்துள்ளார்.
கொல்லப்பட்ட ரஷ்ய தளபதி
போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் போர் விமானங்கள் தரையிறங்கும் மின்ஸ்க் கப்பல் மீது உக்ரைன் சிறப்பு தாக்குதல் நடத்தியது.
மேலும் கருங்கடல் கடற்படையின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் அறிவித்தது.
மேலும் உக்ரைனின் இந்த சிறப்பு தாக்குதலில் கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ-வும் கொல்லப்பட்டதாக உக்ரைன் சிறப்பு படை அறிவித்தது.
கூட்டத்தில் கலந்து கொண்டு தளபதி
இந்நிலையில் உக்ரைனின் சிறப்பு தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ இணைப்பு மூலம் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ மரணம் குறித்த தரவுகளை தெளிவுபடுத்துவதாக உக்ரைனிய சிறப்பு படை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |