ஒரு லிட்டர் விஷம் 3.5 கோடி; பாம்புகளை வளர்த்து கோடிகளில் சம்பாதிக்கும் கிராம மக்கள்!
பொதுவாக கிராமங்களில் விவசாயம், கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் பாம்புகளை வளர்த்து பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிந்தால் பயந்து நடுங்குவார்கள்.
பாம்பு கிராமம்
உண்மையில் பெரும்பாலான மக்கள் பாம்பை கண்டால் ஓடுவார்கள், அல்லது கொன்று விடுவார்கள். ஆனால் அந்த பாம்புகளையே பண்ணை வைத்து வளர்ப்பதன் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கும் நாடு இருக்கிறது.
சீனாவில் உள்ள ஜிசிகியோ (Jisiqiao) கிராமத்தில் உள்ள மக்கள் பாம்புகளை வளர்த்து பணம் சம்பாதிக்கின்றனர். மேலும், இக்கிராம மக்களின் முக்கிய வருமானம் பாம்பு வளர்ப்பு. இதனால் இந்த கிராமம் பாம்பு கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது.
Reuters
ஒவ்வொருவரும் 30,000 பாம்புகளை வளர்க்கிறார்கள்!
பாம்பு வளர்ப்பில் உலகப் புகழ் பெற்ற இந்தக் கிராமத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 1,000 பேர். ஆனால் ஒவ்வொருவரும் 30,000 பாம்புகளை வளர்க்கிறார்கள். அவர்கள் தங்கள் வீடுகளை பாம்புகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாற்றுகிறார்கள். இங்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பாம்புகள் விற்பனையாகின்றன என்று தெரிகிறது.
இவையெல்லாம் விஷம் இல்லாத பாம்புகள் என்றால் நீங்கள் நினைத்தால், அது தவறு. ஏனெனில் இந்த பாம்புகளில் பெரும்பாலானவை அதிக விஷம் கொண்டவை என்றும் தெரிகிறது.
அவற்றில் நாகப்பாம்புகள், மலைப்பாம்புகள் மற்றும் 20 பேரை தங்கள் விஷத்தால் எளிதில் கொல்லக்கூடிய விரியன் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. இவை தவிர பல ஆபத்தான வகை பாம்புகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன.
ஒரு லிட்டர் விஷம் 3.5 கோடி
இந்த கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பொம்மைகளுக்கு பதிலாக பாம்புகளுடன் விளையாடுகிறது. இந்த மக்கள் அவர்களுக்கு சிறிதும் பயப்படுவதில்லை. ஏனெனில் அவர்களின் வருமானம் இவற்றின் மூலம் மட்டுமே.
இந்த கிராம மக்கள் பாம்பு இறைச்சி, மற்ற உடல் உறுப்புகள், அதன் விஷத்தை சந்தையில் விற்பனை செய்து பெரும் பணம் சம்பாதிக்கின்றனர். பாம்பு விஷம் தங்கத்தை விட மதிப்புமிக்கது. மிகவும் ஆபத்தான பாம்பின் ஒரு லிட்டர் விஷம் 3.5 கோடி ரூபாய் வரை விலை போகும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Jisiqiao village in China, Snake Village, Snake Farming, Snake Village in China, Snake Business