30 குழந்தைகளின் உயிர்.,தெரு நாய்க்கு இறுதிச் சடங்கு நடத்திய கிராமம்
ஒடிசாவில் தெரு நாய் ஒன்றுக்கு கிராமே இணைந்து இறுதிச் சடங்கு நடத்தி இருப்பது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தைகளை காப்பாற்றிய நாய்
இந்தியாவில் தெரு நாய்களுக்கு எதிரான மற்றும் ஆதரவான மனபோக்கு இருந்து வரும் நிலையில், ஓடிசாவின் மயூர்பஞ்சியில் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அதாவது, மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தீர்குலா கிராமத்தில் அமைந்துள்ள மழலையர் பள்ளியில் கிட்டத்தட்ட 30 பள்ளி குழந்தைகளின் உயிரை விஷப்பாம்பிடம் இருந்து காளி என்ற பெயர் கொண்ட தெரு நாய் தன் உயிரை தியாகம் செய்து காப்பாற்றியுள்ளது.
She had no home… yet she protected like family. 🐾🥺❤️
— Kalam Center (@KalamCenter) April 21, 2026
In Odisha’s Mayurbhanj, as dozens of schoolchildren sat outside, danger crept silently—a venomous snake.
Before anyone could react, a stray dog—Kali—jumped in.
The snake struck her face again and again…
but she didn’t… pic.twitter.com/607YyUsdHZ
பள்ளி வளாகத்தில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்த போது வளாகத்திற்குள் விஷப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது, அப்போது அங்கிருந்த தெருநாய் காளி விஷப்பாம்பிடம் இருந்து குழந்தைகளை காக்க பாம்புடன் சண்டையிட்டு உள்ளது.
பாம்பு குழந்தைகளிடம் நெருங்காமல் இருப்பதற்காக காளி அதனுடன் தீவிரமாக போராடியதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரை கொடுத்து குழந்தைகளை காப்பாற்றிய நாய்
தெருநாய் காளியின் முகம், வாய் என பல இடங்களில் விஷப் பாம்பு கடித்தாலும், அதை கொல்லும் வரை விடாமல் சண்டை போட்டுள்ளது.

இறுதியில், பாம்பு இறந்த சிறிது நேரத்திலேயே தெருநாய் காளியும் உயிரிழந்துள்ளது.
உயிரை கொடுத்து குழந்தைகளின் 30 குழந்தைகளின் உயிரை காப்பாற்றியதற்காக காளிக்கு அந்த கிராம மக்கள் அனைவரும் இணைந்து இறுதி சடங்கு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |