நல்லெண்ணெய் நாட்டுக்கோழி குழம்பு: கிராமத்து ஸ்டைல் ரெசிபி இதோ!
எலும்புகளை ஆரோக்கியமாக்கும் நாட்டுக்கோழி இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது.
எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.
நாட்டுக்கோழியில் சுவையான கிராமத்து ஸ்டைல் நல்லெண்ணெய் நாட்டுக்கோழி குழம்பு எப்படி வைப்பதென்று பார்ப்போம்.
Gomathi's recipes
தேவையான பொருட்கள்
- நாட்டுக்கோழி-1kg
- நல்லெண்ணெய்
- கொத்தமல்லி- 3ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- காரத்திற்கேற்ப
- சீரகம்- 1/2 ஸ்பூன்
- மிளகு-1ஸ்பூன்
- மஞ்சள்- 2 துண்டு
- தேங்காய்-1 கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்-2ஸ்பூன்
- சின்ன வெங்காயம்-12
- உப்பு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி நாட்டுக்கோழியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
10 நிமிடம் வதக்கிய பின் அதில் கறி மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்கின்ற போது அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும்.
nams corner
பின் கொத்தமல்லி, காய்ந்த மிளகாய்,சீரகம், மிளகு,மஞ்சள், சின்ன வெங்காயம் , தேங்காய் இவை அனைத்தையும் பேஸ்ட் போல் நன்கு அரைத்து கொதிக்கின்ற கறியில் சேர்க்க வேண்டும்.
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கறி வெந்தவுடன் அதை அடுப்பில் இருந்து இறக்கி வைக்க வேண்டும்.
பின் தாளிப்பிற்கு நல்லெண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பி கொட்டினால் கிராமத்து ஸ்டைல் நல்லெண்ணெய் நாட்டுகோழி குழம்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |