பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் கிராம மக்கள்
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பதுங்கு குழிகளை கிராம மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
பதுங்கு குழிகள் தயார்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவியுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையோர கிராம மக்கள் நிலத்தடிகளில் பதுங்கு குழிகளை தயார் செய்கின்றனர். இது 'மோடி பதுங்கு குழிகள்' என்று அறியப்படுகிறது.
இவற்றில் போர்வைகள் மற்றும் படுக்கைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன. எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்படும் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க இந்த பதுங்கு குழிகள் தயார் செய்யப்படுகின்றன.
பூஞ்ச் மற்றும் ரஜவுரி உள்ளிட்ட ஆபத்தான பகுதிகளில் பதுங்கு குழிகளை அமைக்க மத்திய அரசு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்கியது. அதாவது 5 மாவட்டங்களில் 14,460 பதுங்கு குழிகளை கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 8 ஆயிரம் பதுங்கு குழிகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கர்மர்ஹா கூறும்போது, "சமீப காலமாக மக்கள் பதுங்கு குழிகளை மறந்துவிட்ட நிலையில் மீண்டும் போர்பதற்றம் நிலவியுள்ளதால் அவற்றை சுத்தம் செய்து வருகின்றனர்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |