190.4 மில்லியன் டொலர்களுக்கு வாங்கப்பட்ட வான் கோ ஓவியம்: ஏலத்தில் வரலாற்று சாதனை
Vincent van Gogh painting sells for $190.4m: உலக புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட் வான் கோவின் அரிய கலைப்படைப்பு 190.4 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.
அதிக விலைக்கு விலை போன வான்கோவின் கலைப்படைப்பு
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் நடைபெற்ற ஏலத்தில் உலக புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட் வான் கோவின் அரிய கலைப்படைப்பு ஒன்று சுமார் 190.4 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
Châtaigniers en fleurs - "பூத்துக் குலுங்கும் செஸ்ட்நட் மரங்கள்" என்ற வான்கோவின் எண்ணெய் ஓவிய கலை படைப்பு புதன்கிழமை நடந்த ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

ஏலத்திற்கு முன்னதாக இந்த ஓவியம் கிட்டத்தட்ட 180 பில்லியன் டொலர்களுக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த மதிப்பை தாண்டி விற்பனையாகியுள்ளது.
இருப்பினும், இந்த ஓவியத்தை வாங்கிய நபரின் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
1890ம் ஆண்டு வான்கோவின் இறுதி இரண்டு மாதங்களில் வரையப்பட்ட இந்த ஓவியம், தனிநபரிடம் இருந்த மிக முக்கியமான பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக வான் கோவின் ஓவியம் சுமார் 117.2 மில்லியன் டொலர்களுக்கு அதிகபட்சமாக கடந்த 2022ம் ஆண்டு விற்பனையாகி இருந்தது.