அரசு வேலையும் நிலமும் வேண்டாம்.., ரூ.4 கோடி பணத்தை தேர்வு செய்த வினேஷ் போகத்!
அரசு வேலை, நிலம் வேண்டாம் என்று கூறி ஹரியானா அரசின் ரூ.4 கோடி பரிசை வினேஷ் போகத் தேர்வு செய்துள்ளார்.
ரூ. 4 கோடி பரிசுத்தொகை
மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.
பின்னர், மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவர் ஜூலானா சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
இதனிடையே ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் அடிப்படையில் வினேஷ் போகத்திற்கு சலுகை வழங்குவதாக அரியானா அரசு அறிவித்தது.
அதன்படி, ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது அரியானா ஷாஹ்ரி விகாஸ் பிரதிகரன் (HSVP) கீழ் ஒரு நிலம் ஒதுக்கீடு அல்லது 'குரூப் A' அரசு வேலை ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்று வினேஷ் போகத் தேர்வு செய்ய அரசு கூறியிருந்தது.
இந்நிலையில், ரூ.4 கோடி பரிசுத்தொகையை அவர் தேர்வு செய்துள்ளார். இதுகுறித்த கடிதத்தை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |