இறங்கி வந்து 2 சிக்சர்கள் விளாசி வானவேடிக்கை காட்டிய சிஎஸ்கே கேப்டன் தோனி! வீடியோ காட்சி
ஐபிஎல் தொடரின் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி 8 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார்.
இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணிக்காக மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் தோனி தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே மெகா சிக்சரை விளாசினார்.
வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் கிரீஸில் இருந்து இறங்கி வந்து சிக்சர் அடித்து மிரட்டினார் தோனி.
சும்மா அரங்கமே அதிருல்ல...தல...தல?#CSK? All the Best ? ?
— ?NNAN (@Tpkannan4) May 8, 2022
#WhistlePodu#CSK?#Dhoni #ChennaiSuperKings#MSDhoni #CSKvDC pic.twitter.com/3BJzyRlVyn
சிக்சராக விளாசிய ராஜபக்சாவை க்ளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றிய சாஹல்! வைரலாகும் வீடியோ
இதற்கு பிறகு மேலும் ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்த தோனி இறுதிவரை அவுட்டாகாமல் 21 ரன்களுடன் களத்தில் நின்றார்.
41 வயதான தோனி 25 வயது வீரர் போல மிகவும் சுறுசுறுப்பாக ஆடினார் எனவும், 2008ல் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதை பார்த்தை போல இருந்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
@msdhoni #Dhoni #CSK? pic.twitter.com/BmNbSBLwoX
— Sethupathi? (@Sethupathy12) May 8, 2022