லண்டன் இசை நிகழ்ச்சியில் வன்முறை! 5 இளைஞர்கள் கைது
தென் கிழக்கு லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் வெடித்த வன்முறையில் 5 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இசை நிகழ்ச்சியில் வன்முறை
தென் கிழக்கு லண்டனின் தேம்ஸ்மீட் பகுதியில் நடைபெற்ற நள்ளிரவு இசை நிகழ்ச்சி ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை வன்முறை வெடித்தது.
இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 300 பேர் கலந்துகொண்டிருந்த இந்த இசை நிகழ்ச்சியில் பெரும் கலவரம் ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து, மெட்ரோபொலிட்டன் பொலிஸ் அதிகாரிகள் அதிகாலை 4:19 மணிக்கு நாதன் வே பகுதிக்கு விரைந்தனர்.
அப்போது அங்கு 22 முதல் 32 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் கத்திக்குத்து காயங்களுடன் கண்டறியப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதி
காயமடைந்த ஐந்து பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பின்னர், அவர்கள் அனைவரும் வன்முறைச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸ் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து பேசிய துப்பறியும் ஆய்வாளர் ஸ்டீவன் ஆண்ட்ரூஸ், சந்தேக நபர்களில் மூவரின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்றும், மற்ற இருவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |