குடியிருந்த வீட்டை விற்று சொந்த நிறுவனத்திற்கு முதலீடு செய்த நபர்... இன்று அதன் மதிப்பு
பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்ட விராஜ் பால் கடைசியில் தமது மனைவியின் ஒப்புதலுடன் குடியிருந்த வீட்டை விற்று சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.
தந்தையின் தொழிற்சாலை
Veeba Foods நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருவாய் என்பது ரூ 1,000 கோடி. நாட்டில் ஒரு முன்னணி சாஸ் உற்பத்தியாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள Veeba Foods நிறுவனத்தின் தொடக்கமும், அதன் உரிமையாளரான விராஜ் பாலின் பின்னணியும் புதிதாக தொழில்துறையில் களமிறங்குவோருக்கு ஊக்கமளிப்பதாகும்.
அவரது வெற்றிப் பயணம் சவால்களால் நிறைந்தது. உணவுத் துறையில் விராஜின் ஆர்வம் அவரது இளம் வயதிலேயே தொடங்கியது, அவரது தந்தையின் தொழிற்சாலை மற்றும் டெல்லியின் ஆஹரில் உள்ள ஃபன் ஃபுட்ஸ் ஸ்டால் ஆகியவற்றால் விராஜ் ஈர்க்கப்பட்டிருந்தார்.
குடும்பத் தொழிலில் சேர ஆர்வமாக இருந்தபோதிலும், அவரது தந்தை தனது நிதி சுதந்திரம் மற்றும் திறமையை முதலில் நிரூபிக்க ஊக்குவித்தார். இதனையடுத்து விராஜ் சிங்கப்பூர் பாலிடெக்னிக்கில் கடல்சார் பொறியியல் படித்தார். அத்துடன் வணிகக் கடற்படையில் நல்ல ஊதியம் பெறும் வேலையைப் பெற்றார்.
2002 வாக்கில், ரூ. 3 லட்சம் மாதச் சம்பளம் என்ற நிதி இலக்கை எட்டியதுடன், குடும்ப தொழிலில் ஈடுபட தனது தந்தையின் ஒப்புதலையும் பெற்றார். இதனையடுத்து ஃபன் ஃபுட்ஸ் நிறுவனத்தில் இணைந்தார்.
ஆனால் 2008ல் தனது ஃபன் ஃபுட்ஸ் நிறுவனத்தை ஜேர்மனியின் Dr. Oetker என்ற நிறுவனத்திடம் ரூ 110 கோடிக்கு அவரது தந்தை விற்பனை செய்ய, விராஜுக்கு அது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தங்கள் வீட்டை விற்றனர்
தொடக்கத்தில் தந்தையின் இந்த முடிவை விராஜ் எதிர்த்தார், ஆனால் புதிய முயற்சிகளை ஆராய்வதில் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். 2009ல் 'பாக்கெட் ஃபுல்' என்ற உணவக வணிகத்தில் நுழைந்தார், ஆனால் 2013 ல் நெருக்கடிகளை எதிர்கொண்ட பாக்கெட் ஃபுல் உணவகம் இறுதியில் மூடப்பட்டது.
இந்த நிலையில், துணிச்சலான முடிவாக ராஜஸ்தானின் நீம்ரானாவில் அவர் நிறுவிய வீபா ஃபுட்ஸ் என்ற நிறுவனத்திற்கு முதலீடு செய்யும் வகையில், விராஜ் மற்றும் அவரது மனைவி தங்கள் வீட்டை விற்றனர்.
அந்த முடிவு அவர்களை கைவிடவில்லை. வீபா உரிய அங்கீகாரத்தை விரைவாகவே பெற்றது. 2023 மற்றும் 24ல் வீபா நிறுவனத்தின் ஆண்டு வருவாய் என்பது ரூ 1000 கோடி என்றே தகவல் வெளியாகியுள்ளது.
Viraj Bahl இன் சரியான சொத்து மதிப்பு வெளியிடப்படவில்லை, Veeba Foods இன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனராக அவரது பங்களிப்பு அவரை நாட்டின் பணக்கார தொழில்முனைவோர் பட்டியலில் இடம்பெற வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |