ட்ரம்ப் போல் முகம்கொண்ட எருமை விற்பனை..கடைசி நேரத்தில் மீட்பு
டொனால்ட் ட்ரம்ப் போன்ற முகத்தோற்றம் கொண்ட எருமை மீட்கப்பட்டு, தேசிய உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ட்ரம்ப் போல் முகத்தோற்றம் கொண்ட எருமை
வங்காளதேசத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போல் முகத்தோற்றம் கொண்ட எருமை ஒன்று பேசுபொருளானது.

அதன் பின்னர் நாராயண்கஞ்ச் பகுதியில் ஒரு பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த அல்பினோ என்ற அந்த எருமை, ஈத் பண்டிகைக்காக விற்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்த நிலையில், அல்பினோ எருமை மீட்கப்பட்டு வங்காளதேசத்தின் தேசிய மிருகக்காட்சிசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அந்த விலங்கைப் பாதுகாக்கவும், பார்வையாளர்கள் அதைப் பாதுகாப்பாகப் பார்க்க ஒரு வாய்ப்பை வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கடைசி நேரத்தில் மீட்பு
குறித்த விலங்கு மீது மக்களிடையே அதிகரித்து வரும் ஆர்வத்தின் இடையே, அரசு அதிகாரிகள் கடைசி நேரத்தில் தலையிட்டனர். பின்னர் அந்த விலங்கை வாங்கி, டாக்காவில் உள்ள பூங்காவிற்கு மாற்றினர்.
இதன்மூலம் பலியிடுவதற்கு பதிலாக பொதுமக்களின் பார்வைக்குள் எருமை வைக்கப்படும். தற்போது அந்த எருமை அதற்கென ஒதுக்கப்பட்ட அடைப்பிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அது விலங்கியல் பூங்காவில் அதிகம் புகைப்படம் எடுக்கப்படும் விலங்குகளில் ஒன்றாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |