இனி மிதந்து கொண்டே சாப்பிடலாம்! நார்வேயின் மாயாஜால மிதவை உணவகம்: புகைப்படங்கள்
நார்வேயின் கம்பீரமான ஃப்ஜோர்டுகளின் இடையே, உணவு மற்றும் இயற்கை அழகோடு இணைந்த தனித்துவமான அனுபவத்தை வழங்கும் “சால்மன் ஐ” உணவகம் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது.
நார்வேயின் ஐரிஸ் உணவகம்(Norway's Floating Restaurant)
நார்வேயின் Hardangerfjord-இல் அமைந்துள்ள கட்டிடக்கலையின் தலைசிறந்த ஐரிஸ், "கடல் கண்ணாடி" என அழைக்கப்படும் “ சால்மன் ஐ”(Salmon Eye)உணவகம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது.
கோபன்ஹேகனில்(Copenhagen) உள்ள க்வோர்னிங் டிசைனால்(Kvorning Design) வடிவமைக்கப்பட்டுள்ள மிதக்கும் உலோக கண்ணாடி உணவகம் 11,000 சதுர அடியில் மிகப்பெரிய வாக்-இன் ஆர்ட் உணவகமாக நிறுவப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த உணவகத்தின் வடிவமைப்பு சால்மன் மீனின் கண்களை பிரதிபலிக்கும் விதமாக நிறுவப்பட்டு இருப்பதால் “ சால்மன் ஐ”(Salmon Eye)உணவகம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஐரிஸில் உணவகத்தில் உணவு அருந்தும் நபர்களுக்கு தண்ணீர் மற்றும் அடங்காத இயற்கையின் அழகும் விருந்தாக பரிமாறப்படுகிறது.
1,256 டன் எடையுள்ள ஐரிஸ் சால்மன் ஐ உணவகம் நிலையான மீன் வளர்ப்பு முறைகளை காட்சிப்படுத்துவதுடன், ஐரிஸின் சமூக பொறுப்புணர்வு நோக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
Sebastian Lamberg Torjusen
சமையலின் சுவைப் பயணம்
டேனிஷ் செஃப் அனிகா மாட்சன் தலைமையிலான உணவு தயாரிப்புக் குழு, நார்வேயின் சுவையை 18-உணவு சுவை மெனுவில் காட்சிப்படுத்துகிறது.
புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன், ஷெல்ஃபிஷ், மற்றும் உள்ளூர் காய்கறிகள், மூலிகைகள், பெர்ரிக்களைப் பயன்படுத்தி பிரத்யேக உணவுகள் படைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு கடிக்களிலும் ஃப்ஜோர்டுகளின் தனித்துவத்தை உணர முடியும்.
John Asle E. Hansen
மிதவை உணவகத்தின் தனித்துவம்
ஐரிஸ் உணவகம் வெறும் உணவுக்கான இடம் அல்ல. அது ஒரு அனுபவம். மின்சார படகில் ஃப்ஜோர்டின் அழகிய காட்சிகளை ரசித்தபடி உணவகம் செல்லும் பயணம் ஒரு மறக்க முடியாத தருணம்.
படகு ஹவுஸில் சிற்றுண்டியுடன் தொடங்கும் பயணம், உணவகத்தின் வட்ட வடிவ உட்புறத்தில் முடிவடைகிறது. பனோரமிக் ஜன்னல்கள் வழியே சுற்றியுள்ள இயற்கை அழகை ரசித்தபடி உணவை ருசிக்கலாம்.
John Asle E. Hansen
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
#Norwaytravel #foodie #travelgram #instatravel #travelphotography #europe #bucketlist #uniqueeats #wanderlust #adventuretravel #scandinaviatravel #sustainabletravel #foodietravel #luxurytravel #michelinstar #Irisrestaurant #floatingrestaurant #fjordsofnorway #norwegiancuisine #fine dining #cheflife #culinaryexperience #instafood #foodphotography #foodstagram #delicious #gastronomy #foodlover #hardangerfjord #norwaynature #norway?? #visithardangerfjord #fjordlife #fjordnorway #ecofriendlytravel #ecotourism