அம்பதி ராயுடுவுக்கு இவ்வளவு அழகான மகளா; வைரலாகும் புகைப்படம்
சென்னை சூப்பர் கிங்ஸின் பாகுபலி என்று அழைக்கப்படும் துடுப்பாட்ட வீரரான அம்பதி ராயுடு தனது சமூக வலைத்தளங்களில் நேற்றைய தினம் அவரது இரண்டாவது மகளின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
ராயுடுவை வாழ்த்தவும், தங்கள் ரசிகர்களுடன் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளவும் சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அம்பதி ராயுடு
இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை அணிக்காக விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு.
அம்பதி ராயுடு தனது ஐபிஎல் வாழ்க்கையில் இன்றுவரை 200 போட்டிகளில் விளையாடி 28.37 சராசரியுடன் 4312 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.
வைரலாகும் அவரது மகள்களின் புகைப்படங்கள்
பெண் குழந்தைகள் கிடைப்பது எல்லாம் வரம் என்று கூறி அந்த பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படமானது வைரலாகி வருவதோடு, ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Two folds the Super dad joy ? Congratulations Rayudu and Family ??#WhistlePodu #Yellove ? pic.twitter.com/74hCb0tT6X
— Chennai Super Kings (@ChennaiIPL) May 16, 2023