வாங்க மீன் பிடித்து சமைத்து சாப்பிடலாம்! வைரலாகும் ஜப்பானில் வினோத ஹோட்டல்
ஜப்பானில் வினோத ஹோட்டல் ஒன்றின் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அங்கு மீன் சமைக்க விரும்பினால் அங்குள்ள குளத்தில் மீன் பிடித்து சமைக்கலாம் அல்லது உங்களுங்குப் பிடித்தவாறு வழிமுறைகளை கூறி சமையல்காரர் கொண்டு சமைக்கலாம்.
இதுகுறித்த வீடியோ ஒன்றினை பெண் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
This restaurant in Japan has people fish for their supper ?
— Theo (@TheoShantonas) November 2, 2022
Would you eat there? ? pic.twitter.com/yUUkAqeWkg
அதில் பெண் ஒருவர் சிறய குளத்தில் இருக்கு மீன் ஒன்றினை பிடித்து அதனை எடுத்து தானாகவே சமைத்து சாப்பிடுகிறார். இந்த வீடியோவை பலர் பார்த்தும் ரசித்தும் வருகிறார்கள்.
இதுபோன்று சைவம், அசைவம் என பல உணவுகளைத் தயார் செய்வதற்கான காய்கறிகள், மசாலா பொருள்கள் என சமையலுக்குத் தேவையான மூலப் பொருள்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
தேவை என்றால் இதில் ஏதாவது எடுத்து சமைக்கலாம் அல்லது பொருள்களை எடுத்துக்கொடுத்து சமையல்காரரை சமைக்கச் சொல்லலாம். ஆர்டர் செய்தும் சாப்பிடலாம்.
மேலும் இந்த வினோத ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் இது வித்தியாசமான புதுமையான அனுபவமாக உள்ளதாக கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள்.