மாலத்தீவு சுற்றுலா முடிந்து வந்தவுடன் மருத்துவமனைக்கு சென்ற கோலி - அனுஷ்கா சர்மா! குழம்பிய ரசிகர்கள்
விராட் கோலியும் - அனுஷ்கா சர்மாவும் மாலத்தீவில் இருந்து திரும்பியவுடன் மருத்துவமனைக்கு சென்றது ரசிகர்கள் இடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஐபிஎல் முடிந்த கையுடன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகா ஆகியோருடன் மாலத்தீவுக்கு சென்றிருந்தார். அங்கு கடற்கரை ஓரமாக அவர்கள் மூன்று பேரும் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் மாலத்தீவில் இருந்து நேற்று இந்தியா திரும்பிய விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி, அவசர அவசரமாக மும்பை கோகிலபென் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
நீண்ட நேரமாக மருத்துவமனைக்குள் இருந்த அவர்கள், வெளியேறும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இதனை கண்ட ரசிகர்கள், விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டது, அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல என்ன காரணம் என என்பது குறித்து குழப்பம் எழுந்துள்ளது.
இருந்த போதிலும் தம்பதிகள் மருத்துவமனைக்கு சென்றதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
இந்திய அணி வீரர்கள், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக வெகு விரைவில் புறப்படுகின்றனர். கோலியும் அவர்களுடன் தான் செல்கிறார். இப்படிப்பட்ட சூழலில் தான் விராட் கோலி மருத்துவமனை சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிட்டுள்ளார்.