80வது அரைசதம் அடித்த கோஹ்லி! நியூசிலாந்தை நொறுக்கிய இந்திய அணி
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி 80வது அரைசதம் விளாசினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 74 ஓட்டங்கள் விளாசினார்.
சுருண்ட நியூசிலாந்து
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 185 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக டிம் செய்பெர்ட் 38 ஓட்டங்கள் எடுத்தார்.
அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், குர்நூர் பிரார் 3 விக்கெட்டுகளும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

விராட் கோஹ்லி
பின்னர் ஆடிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆக, சுப்மன் கில் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய விராட் கோஹ்லி (Virat Kohli), தனது 80வது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். அவர் 51 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் விளாசினார்.
இந்திய அணி 22.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

