டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்புகிறாரா விராட் கோலி? அவரே சொன்ன பதில்
டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட உள்ளதாக வெளியான தகவலுக்கு விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி?
இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, கடந்த மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடி வரும் அவர், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 120 பந்துகளில் 11 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 135 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

சமீபத்தில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகி மோசமான தோல்வியை பெற்றது.
துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பினாலும், அனுபவமில்லாத வீரர்கள் அணியில் இல்லாதது தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது.
இதனால், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை விளையாட வைக்க பிசிசிஐ தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
I don’t always believe what I read in the media or on social media. But, if it’s half true that both Virat and Rohit are considering playing Test cricket again, then it needs to be taken very very seriously.
— Kevin Pietersen🦏 (@KP24) November 30, 2025
The survival of Test cricket is a hot topic of conversation and if the…
இது குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், "விராட் மற்றும் ரோஹித் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து ஆலோசித்து வருவது உண்மை என்றால், அதை மிக மிக தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் மீண்டும் விளையாட விரும்பினால், அவர்கள் விளையாட வேண்டும்!” என கூறினார்.
கோலி சொன்ன பதில்
இந்நிலையில், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது தொடர்பான கேள்விக்கு விராட் கோலி பதிலளித்துள்ளார்.

இது குறித்து பேசிய கோலி, "எனக்கு தற்போது 37 வயதாகிறது. முன்புபோல் ஒரு விடயத்தை சுலபமாக செய்ய முடியாது. 300க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிருப்பதால் என் உடல் எந்த அளவிற்கு ஒத்துழைக்கும் என்பது எனக்கு தெரியும்.
நான் எனது உடலையும் கவனித்துக்கொள்ள வேண்டும். இனி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே விளையாடுவேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |