விராட் கோலி பயன்படுத்திய ஆடம்பரமான சொகுசு கார் விற்பனைக்கு! விலை என்ன தெரியுமா?
விராட் கோலி பயன்படுத்திய விலையுயர்ந்த ஆடம்பர சொகுசு கார் விற்பனைக்கு வந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரராக உள்ள விராட் கோலி பெரிய கார் பிரியர் ஆவார். அவரது ஆரஞ்சு நிற ஆடம்பர லம்போகினி சொகுசு கார் இப்போது கொச்சியில் ரூ.1.35 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
ஒரு ஆட்டோமொபைல் வெப்சைட்டில் கண்ட விராட் கோலி இந்த ஆரஞ்சு லம்போகினியை 2015-ல் வாங்கினார். ஆனால் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இந்தக் காரை விற்று விட்டார்.
புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட இந்த கார் இப்போது கொச்சியில் உள்ள ராயல் ட்ரைவ் என்ற பழைய ஆடம்பர கார் வாங்கி விற்பனை செய்யும் டீலரின் ஷோ ரூமில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராயல் ட்ரைவ் ஷோ ரூமின் மார்க்கெட்டிங் அதிகாரி கூறும்போது, இது 2013 லம்போகினி மாடல். இதை விராட் கோலி சிறிது காலமே பயன்படுத்தினார். 10,000 கிமீ வரைதான் ஓடியிருக்கிறது. ஜனவரி 2021-ல் கொல்கத்தாவில் உள்ள ஒரு டீலரிடமிருந்து நாங்கள் இந்த பிரபல காரை வாங்கினோம் என கூறியுள்ளார்.
இந்த கார் ஸ்டார்ட் ஆகி 4 விநாடிகளில் 100 கிமீ வேகமெடுக்கக் கூடியது. 324 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.