வெற்றி... ஆசை மனைவிக்கு Video Call செய்த கோலி- வைரலாகும் புகைப்படம்
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
விராட் கோலி செய்த வீடியோ கால்
நேற்று லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், பெங்களூரு அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி அடைந்தது.
நேற்றைய ஆட்டம் விராட் கோலியின் ஆட்டமாகவே இருந்தது. விராட்கோலியின் ஆட்டத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் வான் முட்டும் அளவிற்கு ஆர்ப்பரித்து உற்சாகம் அடைந்தனர்.
இப்போட்டியில் விராட் கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு வித்திட்டார். ஆட்டநாயகன் விருதை விராட் கோலி தட்டிச்சென்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் ஐபிஎல் சதத்தை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@aftab169
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில்,
சதம் அடித்த பிறகு, விராட் கோலி அனுஷ்கா சர்மாவிற்கு வீடியோ கால் மூலம் சதம் அடித்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அப்போது வீடியோ காலில் விராட் கோலி மகிழ்ச்சியோடு தன் மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கிறார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாவ்... அழகான தருணம்.. நட்சத்திர ஜோடி... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Virat Kohli on video call with Anushka Sharma ❤️ after won the match. ?
— ??????ᵛʲ ~ ᵛⁱʳᵃᵗ ᶠᵃⁿ (@paramu_vj) May 19, 2023
What a beautiful picture?? Precious ?#ViratKohli? pic.twitter.com/WRU4XHa6PW