எனது வேலை சிறப்பாக முடிந்துவிட்டது - விராட் கோலி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில், சிறப்பான தருணங்களின் புகைப்படங்களை விராட் கோலி பகிர்ந்துள்ளார்.
கோலியின் அதிரடி சதத்தில் வென்ற RCB
நேற்று ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. ஐதராபாத் அணி நிர்ணயித்த 187 ஓட்டங்கள் இலக்கை 20வது ஓவரின் 2வது பந்தில் பெங்களூரு அணி எட்டியது.
நட்சத்திர வீரர் விராட் கோலி 63 ப பந்துகளில் 100 ஓட்டங்களும், ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் 47 பந்துகளில் 71 ஓட்டங்களும் விளாசினர். சதம் விளாசிய கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
கோலியின் வெற்றிப் பதிவு
அதன் பின்னர் அவர் தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில், நேற்றைய போட்டியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்தார். அதனுடன் ஐதராபாத்தில் எனது வேலை சிறப்பாக முடிந்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவினை பார்த்த கோலியின் ரசிகர்கள் சிலாகித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ரசிகர் ஒருவர் விராட் கோலியை கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணித்துள்ளார்.
GOD OF CRICKET ?❤️? pic.twitter.com/VrSAeX4dGe
— Hail Virat Kohli ? (@HailViratKohli) May 18, 2023