ருத்ரதாண்டவம் ஆடிய விராட் கோலி.... - மீண்டும் Miracle செய்த 18ம் திகதி, 18ம் எண்.... - வாய் பிளந்த ரசிகர்கள்
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மீண்டும் விராட் கோலிக்கு 18ம் திகதி, 18ம் எண் அற்புதம் செய்தது.
ருத்ரதாண்டவம் ஆடிய விராட் கோலி
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், பெங்களூரு அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி அடைந்தது.
நடைபெற்ற இந்தப் போட்டியில் விராட் கோலி ருத்ரதாண்டவம் ஆடி மைதானத்தை அனல் தெறிக்க விட்டார். சமீபத்தில் விராட் கோலியை கங்குலி அப்பட்டமாகப் புறக்கணித்தார்.
இதன் பின்பு, மைதானத்தில் கவுதம் கம்பீருடன் ஏற்பட்ட மோதல், ரசிகர்கள் முன்பு பட்ட அவமானம், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக விராட் கோலி மீது போட்ட அபராதம் இதையெல்லாம் விராட் கோலியை மனதளவில் காயத்தை ஏற்படுத்தியதோ என்னவோ, நேற்றைய ஆட்டத்தில் எதிராளிகளின் கண்கள் பிதுங்கும் அளவிற்கு சூறாவளி போல் சும்மா.. சுழன்று சுழன்று பந்தை அடித்து நொறுக்கினார்.
நேற்றைய ஆட்டம் விராட் கோலியின் ஆட்டமாகவே இருந்தது. விராட்கோலியின் ஆட்டத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் வான் முட்டும் அளவிற்கு ஆர்ப்பரித்து உற்சாகம் அடைந்தனர்.
இப்போட்டியில் விராட் கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு வித்திட்டார். அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை விராட் கோலி தட்டிச்சென்றார்.
மீண்டும் Miracle செய்த 18ம் திகதி, 18ம் எண்
கோலிக்கு 16 வயது இருக்கும்போது, ரஞ்சி போட்டியில் ஆடி கொண்டிருக்க, போட்டி நடுவே அவருடைய தந்தை உயிரிழந்தார். அடக்கம் கூட செய்யக்கூட முடியாமல் விராட் கோலி விளையாடினார்.
சமீபத்தில் விராட் கோலி பேசுகையில், ‘18’ என்று நம்பர் கொண்ட சட்டையை நானாக கேட்டு வாங்கிக்கொள்ளவில்லை. அது தானாகவே எனக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த நம்பர் என் வாழ்க்கையில் முக்கிய எண்ணாகவே மாறிவிட்டது. ஆகஸ்ட் 18ம் திகதி தான் நான் முதன் முதலாக இந்தியாவிற்காக விளையாடினேன். மேலும், என் அப்பா உயிரிழந்தது டிசம்பர் 18ம் திகதி. இதனால் என் வாழ்க்கையில் மிக முக்கிய திகதியாக இந்த 18ம் எண் மாறிவிட்டது என்றார்.
அதேபோல் நேற்றைய நாள் மே 18ம் திகதி, மீண்டும் அந்த எண் விராட் கோலிக்கு ஒரு மிராக்கலை கொடுத்தது. கோலி அடித்த ஒவ்வொரு ஓட்டத்திற்கும் ரசிகர்கள் வெறித்தனமாக ஆர்ப்பரிக்க மைதானமே அதிர்ந்து போனது.
The moment Virat Kohli registered his 6th IPL CENTURY.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 18, 2023
A six to bring it up! pic.twitter.com/4g4cfcjaAQ
RCB dugout when Virat Kohli completed the hundred.
— Johns. (@CricCrazyJohns) May 18, 2023
What a frame. pic.twitter.com/UKNkDSAfbC