யார் என்னைப் பற்றி என்ன பேசினாலும்... I Dont Care...- விராட் கோலி ஓபன் டாக்!
யார் என்னைப் பற்றி என்ன பேசினாலும் எனக்கு கவலையே இல்லை என்று விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.
சாதனைப் படைத்த விராட் கோலி
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், பெங்களூரு அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியின் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி அடைந்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 63 பந்துகளில் விராட் கோலி சதமடித்து அற்புதமாக விளையாடினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் (6) அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
எனக்கு கவலை இல்லை
இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஐபிஎல் தொடரில் இது என்னுடைய 6வது சதமாகும். பல ஆண்டுகளாக என்னுடைய அணிக்காக வெற்றிறை தேடிக் கொடுத்துள்ளேன்.
இப்போட்டியில் நான் ஆடிய ஆட்டம் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. வெளியிலிருந்து யார் என்னைப் பற்றி என்ன பேசினாலும், அது பற்றி எனக்கு கவலையே இல்லை. அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. ரசிகர்கள் மைதானத்தில் 'RCB...RCB..' என்று ஆர்ப்பரித்து, எனக்கும், என் அணிக்கும் ஆராவாரம் செய்கிறார்கள்.
இதையெல்லாம் யாராலும் செயற்கையாக உருவாக்கிவிட முடியாது. எல்லோரும் என்னை பின்தொடருங்கள். என்னை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று யாரையும் நான் வற்புறுத்தவில்லை. ரசிகர்கள் என் மீது அத்தனை அன்பை வைத்திருக்கிறார்கள். நிறைய அன்பை என் மீது செலுத்துகிறார்கள் என்றார்.
No Virat Kohli fan will pass without liking this pic.twitter.com/Q5wQkSGpJs
— leisha (@katyxkohli17) May 18, 2023