Wow... சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனைப் படைத்த விராட் கோலி: குவியும் வாழ்த்துக்கள்
இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டிலில் அதிக ஓட்டங்கள் எடுத்து 5-வது இடத்திற்கு முன்னேறி மாபெரும் சாதனைப் படைத்துள்ளார்.
சாதனைப் படைத்த விராட் கோலி
வெஸ்ட் இண்டீசுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், போர்ட் ஆப் ஸ்பெயினில் இவ்விரு அணி மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நேற்றிரவு 7.30 மணிக்கு நடந்தது.
இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ஓட்டங்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டத்தின் நேர முடிவில் விராட் கோலி 87 ஓட்டங்களை சேர்த்தார்.
@CricCrazyJohns
இதனால், 500 சர்வதேச போட்டிகளில் விளையாடிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையையும், அரைசதம் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி 5-வது இடத்திற்கு முன்னேறி காலிஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
Virat Kohli's milestones on Day 1:
— Johns. (@CricCrazyJohns) July 21, 2023
- First player to score fifty on the 500th game.
- Highest run getter for India in Tests in 2023.
- 5th highest run getter in International cricket.
- 2nd Indian to complete 2000 runs in WTC history.
The GOAT. pic.twitter.com/wF50BvkWZt
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |