மிக கடுமையாக உடற்பயிற்சி செய்த விராட் கோலி! வைரல் வீடியோ
பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மிக கடுமையாக உடற்பயிற்சி செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாதனைப் படைத்த விராட் கோலி
தற்போது, 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடந்து வருகிறது.
இந்த ஐபிஎல் தொடர்களில் 6000 ஓட்டங்கள் கடந்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
அதாவது, விராட் கோலி 6844 ஓட்டங்கள் எடுத்து முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் 6477 ஓட்டங்கள் எடுத்து ஷிகர் தவானும், 3-வது இடத்தில் 6109 ஓட்டங்களை எடுத்து டேவிட் வார்னரும், 4-வது இடத்தில் 6014 ஓட்டங்கள் எடுத்து ரோஹித் சர்மாவும் இடம் பிடித்துள்ளனர்.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி மிக கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே வியப்படைந்து, லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.